1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 1 நவம்பர் 2022 (10:13 IST)

கௌரவ டாக்டர் பட்டம் பெறும் இசையமைப்பாளர் டி இமான்!

தமிழ் சினிமாவில் மிக இளம் வயதிலேயே இசையமைப்பாளர் ஆனவர்களில் இமானும் ஒருவர். தனது 18 ஆவது வயதில் தமிழன் படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்நிலையில் கடந்த ஆண்டு அவர் சினிமா வாழ்வின் உச்சமாக ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்துக்கு இசையமைத்தார்.

வரிசையாக முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர் படங்களுக்கு இசையமைத்து வரும் நிலையில் சமீபத்தில் திரையுலகில் 20 ஆண்டுகளை நிறைவு செய்து மைல்கல் சாதனையை எட்டியுள்ளார்.

இந்நிலையில் இப்போது அவருக்கு சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் கவுன்சில் சார்பாக அவருக்கு இசைத்துறையில் படைத்த சாதனைக்காக கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை அறிவித்துள்ள இமான் ரசிகர்களின் வாழ்த்துகளுக்கும் அன்புக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.