வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: திங்கள், 26 ஜூலை 2021 (10:40 IST)

ஏ ஆர் முருகதாஸ் படத்தில் சரத்குமார் & சந்தீப் கிஷன்!

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் சரத்குமார் மற்றும் சந்தீப் கிஷன் ஆகியோர் நடிக்க உள்ளனர்.

ஹாலிவுட்டின் பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸுடன் இணைந்து ஏ ஆர் முருகதாஸ் சில படங்களை தயாரித்தார். ஆனால் அவற்றில் சில படங்கள் வசூல் ரீதியாக தோல்வி அடைந்ததால் தயாரிப்பை சில ஆண்டுகளுக்குக் கைவிட்டார். இந்நிலையில் இப்போது மீண்டும் தனது தயாரிப்பில் ஒரு படத்தை உருவாக்க உள்ளார் முருகதாஸ்.

இந்த படத்தில் சரத்குமார் மற்றும் சந்தீப் கிஷன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளனர். இந்த படத்தை எங்கேயும் எப்போதும் புகழ் இயக்குனர் சரவணன் இயக்க உள்ளார். இந்த படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.