ஹிட்லர் பாத்திரத்தில் மிஸ்டர் பீன் நடிகர் – ஆச்சர்யத்தில் ஹாலிவுட் ரசிகர்கள்!
நடிகர் ரோவன் அட்கின்ஸன் நெட்பிளிக்ஸில் ஒளிபரப்பாகி வரும் பீக்கி பிளைண்டர்ஸ் என்ற தொடரில் ஹிட்லர் பாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.
நடிகர் ரோவன் அட்கின்ஸனின் உடல்மொழியும் அவர் செய்யும் சேட்டைகளும் யாராலும் மறக்க முடியாதவை. இந்நிலையில் அவர் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்த மிஸ்டர் பீன் தொடர் 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
இந்நிலையில் அவர் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாக அவர் ஹிட்லர் கதாபாத்திரத்தில் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகி உற்சாகப்படுத்தியுள்ளது. நெட்பிளிக்ஸில் வரவேற்பைப் பெற்றிருக்கும் பீக்கி பிளைண்டர்ஸ் என்ற தொடரின் ஆறாவது சீசனில் அவர் ஹிட்லராக நடிக்க சம்மதித்துள்ளாராம்.