30 ஆண்டுகளை நிறைவு செய்த மிஸ்டர் பீன் தொடர்! மன அழுத்தத்தில் நடந்த படப்பிடிப்பு!

Last Modified புதன், 16 செப்டம்பர் 2020 (12:47 IST)

நடிகர் ரோவன் அட்கின்ஸன் நடித்த மிஸ்டர் பீன் தொடரின் போது அவர் மன அழுத்தத்தில் இருந்ததாக தெரிவித்துள்ளார்.

நடிகர் ரோவன் அட்கின்ஸனின் உடல்மொழியும் அவர் செய்யும் சேட்டைகளும் யாராலும் மறக்க முடியாதவை. இந்நிலையில் அவர் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்த மிஸ்டர் பீன் தொடர் 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

இந்த தொடர் பற்றிய தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார். அந்த தொடரின் போது தான் மிகவும் மன அழுத்தத்தில் இருந்ததாக தெரிவித்த அவர் ‘வளர்ந்த மனிதனுக்குள் இருக்கும் ஒரு குழந்தைதான் மிஸ்டர் பீன்.
அந்த தொடர் வெற்றி பெறும் என முன்பே தெரியும். ஆனாலும் மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கை வெற்றி பெற வேண்டும் என்ற மன அழுத்தத்திலேயே இருந்தேன். சக நடிகர்கள் எனக்கு ஆதரவாக இருந்தபோதும், படப்பிடிப்பு மகிழ்ச்சியை தரவில்லை.
‘ எனத் தெரிவித்துள்ளார்.

இதில் மேலும் படிக்கவும் :