வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 23 ஏப்ரல் 2018 (12:30 IST)

இந்த வாரம் 4 படங்கள் ரிலீஸ்!

தமிழ் சினிமாவில் நடைபெற்ற வந்த ஸ்ட்ரைக் முடிவடைந்ததைத் தொடர்ந்து, இந்த வாரம் 4 படங்கள் ரிலீஸாகவுள்ளது.
 
கியூப் டிஜிட்டல் சேவையை எதிர்த்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நடத்தி வந்த வேலை நிறுத்தப் போராட்டம் கடந்த செவ்வாய்க்கிழமையன்று முடிவுக்கு வந்தது. இதனையடுத்து கடந்த வாரம் பிரபுதேவா நடிப்பில் உருவான மெர்குரி திரைப்படம் ரிலீஸானது.
 
இதைத்தொடர்ந்து இந்த வாரம் 4 தமிழ் படங்கள் திரைக்கு வரவுள்ளது. அதில் அரவிந்த் சாமி மற்றும் அமலா பால் நடிப்பில் உருவான பாஸ்கர் ஒரு ராஸ்கல், சாய் பல்லவி நடிப்பில் உருவான தியா என பெயர் மாற்றப்பட்ட கரு திரைப்படம், விக்ரம் பிரபு நடிப்பில் உருவான பக்கா, மேலும் பாடம் என்ற திரைப்படம் வெளியாகவுள்ளது.