திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Modified: வியாழன், 24 ஆகஸ்ட் 2017 (12:53 IST)

அஜித் அப்பாவாக நடிக்க வேண்டியவர் - நடிகர் சர்ச்சை கருத்து

நடிகர் அஜித் அப்பாவாக நடிக்க வேண்டியவர் என பாலிவுட் சினிமா நடிகரும், விமர்சகருமான கே.ஆர்.கே தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


 

 
அஜித் நடித்த விவேகம் படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. அஜித் ரசிகர்களால் இப்படம் கொண்டாடப்பட்டு வருகிறது. 
 
இந்நிலையில், எப்போது நடிகர்களை பற்றி சர்ச்சையான கருத்துகளை தெரிவித்து வரும் பாலிவுட் நடிகரும், சினிமா தயாரிப்பாளரும், விமர்சகருமான கே.ஆர்.கே தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் “அஜித், பாலிவுட்டில் உங்களை போன்றவர்கள் அப்பாவாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.  ஆனால், தமிழ்நாட்டு மக்கள் உங்களை எப்படி ஹீரோவாக ஏற்றுக்கொண்டார்கள் என எனக்கு புரியவில்லை” என கிண்டலாக கருத்து தெரிவித்துள்ளார்.
 
இவரின் இந்த கருத்து அஜீத் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.