வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: சனி, 25 செப்டம்பர் 2021 (18:24 IST)

பணமோசடி வழக்கு..பிரபல நடிகையிடம் விசாரணை

ரூ. 200 கோடி பண மோசடி வழக்கில் பிரபல நடிகை  ஜாக்குலின் பெர்னாண்டசிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 பெங்களூரில் வசித்து வரும் சுகேஷ் சந்திரசேகர் மற்றும் இவரது மனைவி லீனா பால் ஆகியோர் ரேன்பக்சி நிறுவர்களான சிவிந்தர் சிங், மால்வீந்தர் சிங் ஆகியோரை ஏமாற்றி ரூ.200 கோடி மோசடி செய்துள்ளதாக டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதுதொடர்பாக கடந்த மாதம் 24 ஆம் தேதி சென்னை கிழக்குக் கடற்கரைக் சாலையில் உள்ள லீனா பாலின் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். அதில். ரூ,.82.5 லட்சம் பணம் மற்றும் விலையுயர்ந்த சொகுசுக் கார்களை பறிமுதல் செய்தனர்.

மேலும், பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்ணாண்டசிடம் சுகேஷ் சந்திரசேகர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே இந்தப் பண மோசடி குறித்துப் போலீஸார் பெர்னாண்டசிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் பல மணி நேரம் விசாரணை நடத்தினர். இன்று மீண்டு அவரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.