வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: சனி, 25 செப்டம்பர் 2021 (16:50 IST)

பிக்பாஸுக்கு செல்லும் முன் பார்ட்டி வைத்த நடிகர்!

பிக்பாஸ் செல்லும் முன்னர் நடிகர் வருண் நண்பர்களுக்கு பார்ட்டி வைத்துக் கொண்டாடியுள்ளார்.

தமிழ் சின்னத்திரை ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சிகளில் முக்கியமான ஒரு இடத்தைப் பிடித்திருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். நான்கு சீசன்கள் கடந்த நிலையில் இப்போது ஐந்தாவது சீசனுக்கான பணிகள் தொடங்கப்பட்டு வருகின்றன. விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என சொல்லப்படுகிறது. கடந்த நான்கு சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசனே இந்த சீசனையும் தொகுத்து வழங்குவார் என்பது உறுதியாகியுள்ள நிலையில் அக்டோபர் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்குள் கமல் விக்ரம் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு வருவார் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டு கலந்துகொள்ளும் போட்டியாளர்களில் ஒருவராக ஜோஸ்வா படத்தில் நடித்துள்ள வருண் செல்ல உள்ளாராம். இதையொட்டி அவர் நட்சத்திர ஓட்டலில் நண்பர்களுக்கு பார்ட்டி கொடுத்து கொண்டாடியுள்ளாராம்.