1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : செவ்வாய், 14 ஆகஸ்ட் 2018 (20:26 IST)

சூர்யா படத்தில் பிரபல நடிகர்

செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வரும் சூர்யா அடுத்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்க உள்ள படத்தில் பிரபல நடிகர் மோகன்லாலும் நடிக்கவுள்ளார்.

 
சிங்கம்  சீரியஸில் இருந்து வெளியே வந்த சூர்யா அடுத்த  ஹிட் படத்தை கொடுக்கும் முனைப்பில் இருக்கிறார். தற்போது  செல்வராகவன் இயக்கத்தில் NGK படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வரும் தீபாவளிக்கு விஜய் நடிக்கும் சர்க்கார் படத்துக்கு போட்டியாக வர உள்ளது.
 
இப்படத்திற்கு நந்த கோபாலன் குமரன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அவர் அடுத்ததாக கே வி ஆனந்த் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.  இருவரும்  அயன் படத்தை உருவாக்கி னர். இப் படத்திற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது.
 
இந்நிலையில் இவர்களின் அடுத்த கூட்டணியில் தற்போது கிரிக்கெட் விளையாட்டு வீரரும், நடிகருமான சிரக் ஜானி இணைந்துள்ளார். இப்படத்தின் மலையாள நடிகர் மோகன்லாலும் நடிக்கவுள்ளார்.