திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 5 அக்டோபர் 2020 (15:51 IST)

’த்ரிஷ்யம் 2’ படப்ப்பிடிப்பில் மோகன்லால்-மீனா: வைரலாகும் புகைப்படம்!

’த்ரிஷ்யம் 2’ படப்ப்பிடிப்பில் மோகன்லால்-மீனா
கடந்த 2015 ஆம் ஆண்டு ஜீத்துஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் வெளியான திரைப்படம் ’த்ரிஷ்யம். இந்த திரைப்படம் தமிழ் உள்பட பல இந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அனைத்து மொழிகளிலும் சூப்பர் ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் இந்த படத்தின் ரீமேக்கில் கமல்ஹாசன் கவுதமி நடித்து இருந்தனர் என்பதும் இந்த படம் வசூல் அளவில் மிகப்பெரிய சாதனை செய்தது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ’த்ரிஷ்யம் 2’ படத்தின் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியானதை அடுத்து லாக்டவுன் முடிந்த உடன் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கினாலும் மோகன்லால் மற்றும் மீனா கலந்து கொள்ளவில்லை என்றும் அவர்கள் விரைவில் கலந்து கொள்வார்கள் என்றும் படக்குழுவினர் தரப்பில் இருந்து புறப்பட்டது 
 
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி தொடுபுழா பகுதியில் ’த்ரிஷ்யம் 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது. இதில் மோகன்லால் மீனா மற்றும் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர் 
 
இதுகுறித்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து உறுதி செய்து உள்ளார் நடிகை மீனா என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டே மாதங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்றும் அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன