வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 21 ஏப்ரல் 2021 (12:25 IST)

இந்தியர்களுக்கு கைலாசாவில் அனுமதி இல்லையாம்… நித்தியானந்த ரொம்ப ஸ்ட்ரிக்ட்!

இந்தியாவில் இருந்து தங்கள் நாடான கைலாசாவுக்கு வருவதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என நித்யானந்தா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தனது உக்கிரத்தாண்டவத்தை ஆடி வருகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில் கைலாசா என்ற புது நாட்டை அமைத்துள்ளதாக சொல்லும் சர்ச்சை சாமியார் நித்யானந்தா இந்திய பக்தர்களுக்கு கைலாசா வர அனுமதி இல்லை எனக் கூறியுள்ளார். மேலும் கொரோனா தொற்று அதிகமாக உள்ள நாடுகளில் இருந்தும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.