தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவர் பிருத்விராஜ். இவர் தனது முதல்படமாக மோகன்லாலை வைத்து லூசிபர் படத்தை இயக்கி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார். ஆனால் அதன் பின்னர் நடிப்பில் மீண்டும் கவனம் செலுத்த தொடங்கினார். இதற்கிடையில் லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகத்தை பிருத்விராஜ் இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது.
ஆனால் அதற்கு முன்பாக மோகன்லாலை வைத்து ப்ரோ டாடி என்ற படத்தை இயக்கினார். இந்நிலையில் ஏற்கனவே பிருத்விராஜ் மற்றும் மோகன்லால் கூட்டணியில் உருவாவதாக இருந்த எம்பூரான் திரைப்படம் நீண்ட நாள் தாமதத்துக்குப் பிறகு இப்போது தொடங்கியுள்ளது.
இதையடுத்து படத்தின் முக்கியமானக் காட்சிகளை செங்கலப்ட்டு தொழில் பூங்காவில் படமாக்கி வருகிறாராம் இயக்குனர் பிரித்விராஜ். இந்த ஷூட்டிங்கில் மோகன் லால் மற்றும் மஞ்சுவாரியர் ஆகியோர் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது.