தாயின் ஆசையை நிறைவேற்ற பிரபல நடிகை என்ன செய்தார் தெரியுமா?
நடிகை மியா ஜார்ஜ் தனது அம்மாவின் ஸ்கை டைவிங் ஆசையை நீண்ட வருடங்கள் கழித்து நிறைவேற்றியுள்ளார்.
நடிகை மியா ஜார்ஜ் தமிழில், 'அமரகாவியம்' படத்தின் மூலம் அறிமுகமானார். ஒரு நாள் கூத்து, எமன், இன்று நேற்று நாளை' ஆகிய படங்களில் நடித்துள்ளார். இளம் நடிகையான இவர் படங்களில் எந்த வேடமாக இருந்தாலும் பரவாயில்லை என நடித்து வருகிறார். 'வெற்றிவேல்' படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக இரு நாயகிகளில் ஒருவராக நடித்தார்.
இவர் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் சேர்ந்து நடித்த பரோல் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், தற்போது சில மலையாள படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இவர் தனது அம்மாவின் நீண்ட நாள் ஆசையான ஸ்கை டைவிங் செல்வதை நிறைவேற்றியுள்ளார். இவரும், அவரது அம்மாவும் உற்சாகமாக ஸ்கை டைவிங் செய்வது போன்ற புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகியுள்ளது.