செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 5 டிசம்பர் 2017 (16:25 IST)

எந்த வேடமாக இருந்தாலும் பரவாயில்லை; சொல்வது யார் தெரியுமா?

நடிகை மியா ஜார்ஜ் தமிழில், 'அமரகாவியம்' படத்தின் மூலம் அறிமுகமானார். ஒரு நாள் கூத்து, எமன், இன்று நேற்று நாளை' ஆகிய படங்களில் நடித்துள்ளார். இளம் நடிகையான இவர் படங்களில் எந்த வேடமாக இருந்தாலும் பரவாயில்லை என நடித்து வருகிறார். 'வெற்றிவேல்' படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக இரு நாயகிகளில் ஒருவராக நடித்தார்.
இந்நிலையில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடித்த தி கிரேட் ஃபாதர் படத்தில் டாக்டராக நடித்திருந்தார் மியா. தற்போது  பரோல் படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து வருகிறாராம். அதில் மம்முட்டிக்கு தங்கையாக நடிக்க உள்ளதாக செய்திகள்  வெளிவந்துள்ளன. இதோடு அவருடன் ஒரு குட்ட நாடன் என்னும் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இதில் ராய் லட்சுமி  மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படி வரிசையாக மியா மம்முட்டி படங்களில் நடித்து வருவது வியப்பை  ஏற்படுத்தியுள்ளது.