வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 27 ஜனவரி 2024 (07:14 IST)

சிரஞ்சீவியை இயக்குகிறாரா மித்ரன்? அப்போ சர்தார் 2?

கார்த்தி நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கி கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம் தேதி வெளியான திரைப்படம் சர்தார்.  இந்த படத்தில் கார்த்தி போலீஸ் அதிகாரி, உளவாளி என இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் ஹிட் அடித்துள்ளது. தீபாவளிக்கு ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர். ஆனால் இதுவரை அதற்கான எந்த முன்னெடுப்பும் செய்யப்படவில்லை.

இந்நிலையில் மித்ரன் சில மாதங்களுக்கு முன்னர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவிக்கு கதை சொல்லி சம்மதம் வாங்கி வைத்திருந்தார். அந்த படத்தினைதான் அடுத்து அவர் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு பிப்ரவரி 1 ஆம் தேதி ரிலீஸாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

அதனால் சிரஞ்சீவி படத்தை இயக்கி முடித்த பின்னர்தான் அவர் சர்தார் 2 படத்தை தொடங்குவார் என சொல்லப்படுகிறது.