1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (17:09 IST)

6 Days to Go... வலிமை படத்தின் ரிலீஸ் ப்ரோமோ!

எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள வலிமை படத்தின் ரிலீஸ் ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. 

 
எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள படம் வலிமை. இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். இந்த படம் பொங்கலுக்கு வெளியாக திட்டமிட்டிருந்த நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. பிறகு தற்போது பிப்ரவரி 24 அன்று வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
வலிமை தமிழில் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாக உள்ளது. சமீபத்தில் வலிமை பிற மொழி டிரெய்லர்கள் வெளியானது. இதனால் வலிமை ரிலீஸுக்காக ரசிகர்கள் தீவிரமாக காத்துள்ளனர். வலிமை டிக்கெட் முன்பதிவு 20 ஆம் தேதியன்று தொடங்க உள்ளதாக சில திரையரங்குகள் அறிவித்துள்ளன. 
 
டிக்கெட் முன்பதிவு வலைதளங்களிலும் இன்னும் புக்கிங் தொடங்கப்படாத நிலையில் அவற்றிலும் 20 ஆம் தேதி முதல் முன்பதிவு தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே வலிமை படத்தின் ரிலீஸ் ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ இதோ உங்கள் பார்வைக்கு...