1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (11:19 IST)

ஓடிடியில் வெளியாகும் மின்னல் முரளி!

நடிகர் டோவினோ தாமஸ் நடித்துள்ள மின்னல் முரளி திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் டோவினோ தாமஸ் மற்றும் குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள பேண்டஸி திரைப்படம் மின்னல் முரளி. மிகப்பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் திரையரங்கில்தான் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது கொரோனா நெருக்கடி காரணமாக படத்தை ஓடிடியில் ரிலிஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓனம் பண்டிகையின் போது வெளியாகும் டிரைலரில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது.