ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 16 அக்டோபர் 2023 (19:13 IST)

லியோ பட டிக்கெட் முன்பதிவு செய்ய படையெடுத்த விஜய் ரசிகர்கள்

vijay-leo
கேரளாவில் லியோ பட டிக்கெட் முன்பதிவு செய்ய சுமார் 200க்கும் மேற்பட்ட ரசிகர்கள் வாகனத்தில் ஊர்வலமாக விஜய் போஸ்டரை பிடித்துக் கொண்டு தியேட்டருக்கு சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர், திரிஷா, அர்ஜூன், சஞ்சய்தத் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ள படம் லியோ.

இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். 7 ஸ்கிரீன் நிறுவனம் சார்பில் லலித்குமார் தயாரித்துள்ளார்.

இப்படம் வரும் 19 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகவுள்ளது. இப்படத்திற்கான முன்பதிவு தொடங்கியுள்ளதால், இப்படத்தைக் காண ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

இந்த நிலையில், கேரளாவில் விஜய்க்கு அதிகளவில் ரசிகர்கள் உள்ள நிலையில், இன்று லியோ பட டிக்கெட் முன்பதிவுக்கு இருசக்கர வாகம், ஆட்டோ ஆகியவற்றில் சுமார் 200க்கும் மேற்பட்ட ரசிகர்கள் தியேட்டருக்கு படையெடுத்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.