வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 26 அக்டோபர் 2021 (11:48 IST)

சிம்பு என்னை திட்டமிட்டு ஏமாற்றி விட்டார்! – மைக்கெல் ராயப்பன் பரபரப்பு புகார்!

சிம்பு நடித்த AAA படத்தின் தயாரிப்பாளர் மைக்கெல் ராயப்பன் காவல் நிலையத்தில் சிம்பு மீது புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சிலம்பரசன் நடித்து 2017ல் வெளியான படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவம். இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் டப்பிங் பணிகளுக்கு சிலம்பரசன் ஒத்துழைக்காததால் அப்போதே பல பிரச்சினைகள் ஏற்பட்டு வந்தன. பல பிரச்சினைகளுக்கு பிறகு வெளியான இந்த படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை.

இந்நிலையில் தற்போது சிலம்பரசன் மற்றும் அவரது தந்தை டி.ராஜேந்தர் மீது மைக்கெல் ராயப்பன் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுகுறித்து விளக்கமளித்துள்ள மைக்கெல் ராயப்பன் “நடிகர் சிலம்பரசன் என்னை திட்டமிட்டு ஏமாற்றிவிட்டார். சிலம்பரசன் தனது சம்பளத்தை விட்டுக்கொடுத்து AAA படம் வெளியானதாக சொல்வது பொய்யான தகவல். அடுத்த படம் சம்பளம் பெறாமல் நடித்துக் கொடுப்பதாகதான் சிம்பு தெரிவித்திருந்தார்” என கூறியுள்ளார்.