1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : செவ்வாய், 24 டிசம்பர் 2019 (13:21 IST)

இக்கால தலைமுறையினருக்கு நம்பிக்கையூட்டும் எம்.ஜி.ஆரின் தத்துவ பாடல்கள்!

குடும்ப வறுமையின் காரணமாக நாடகத்துறையில் அறிமுகமாகி பின்னர் திரைத்துறையில் தடம் பதித்து தமிழக மக்களின் நெஞ்சகளில் குடி புகுந்தவர் புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர். இவர் தனது ஒவ்வொரு படங்களிலும் தமிழ் நாட்டு மக்களுக்கு பிடித்தவாறு , இன்ப , துன்பம், மகிழ்ச்சி, துக்கம் உள்ளிட்ட வாழ்க்கையின் மொத்த தத்துவங்களையும் தனது  பாடல்களில் உணர வைத்து ரசிக்க செய்திடுவார். 
 
இதன் மூலம் தமிழகம் முழுக்க கோட்டீஸ்வரர்கள் முதல் பாமர மக்களின் மனங்களில் தனது புகழை மேலோங்கி ஒலிக்க செய்தார். அதையடுத்து அரசியலில் அடியெடுத்து வைத்து தனது வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை உருவாக்கினார். ஆனால், இதற்கெல்லாம் முக்கிய மையில் கல்லாக இருந்தது அவரது திரைப்படங்களும் அதில் இடம்பெற்றிருந்த கருத்தான பாடல்களும் தான். 
 
எத்தனை பெரிய மனிதனுக்கு 
 
1965ம் ஆண்டு வெளிவந்த ஆசை முகம் என்ற படத்தில் இடம்பெற்ற இப்பாடல் இன்றளவும் பலரும் ஃபேவரைட் பாடலாக இருக்கிறது. எஸ்.எம்.சுப்பையா நாயுடுவின் இசையில், கவிஞர் வாலியின் வரிகளில் டி.எம்.செளந்தரராஜன் பாடிய இந்தப் பாடல் அக்கால மக்களின் மிகசிறந்த பாடலாக பார்க்கப்பட்டது.
 
கண்ணை நம்பாதே 
 
1975ம் ஆண்டு வெளிவந்த நினைத்ததை முடிப்பவன் என்ற படத்தின் இந்த பாடல் இடம்பெற்றிருந்தது. இந்த பாடல் இன்றைய தலைமுறையினருக்கு ஏற்ற பாடலாகவும் பார்க்கப்படுகிறது. 
 
நான் ஆணையிட்டால்
 
1966ம் ஆண்டு வெளிவந்த நம்மவீட்டு பிள்ளை படத்தில் "நான் ஆணையிட்டால்" என்ற பாடல் இடம்பெற்று இன்றளவும் மக்களின் இன்றியமையாத பாடலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதுவும் எம்.ஜி.ஆரின் சில பொக்கிஷ படைப்புகளில் ஒன்று. 
 
கடவுள் ஏன் கல்லானார்
 
1970ம் ஆண்டு வெளிவந்த என் அண்ணன் என்ற படத்தில் இந்த படம் இடம் பெற்றிருந்தது. கே.வி.மகாதேவன் இசையில் கவியரசர் கண்ணதாசன் எழுதிய இப்பாடலை டி.எம்.செளந்தரராஜன் பாடியிருந்தார். 
 
நாளை நமதே
 
1975ம் ஆண்டு வெளிவந்த நாளை நமதே என்ற இந்த பாடல் வாழ்வில் எப்பேர்ப்பட்ட துன்பம் வந்தாலும் நிலைத்து நிற்கக்கூடிய அளவிற்கு தைரியம் சொல்லும் பாடலாக அன்று பார்க்கப்பட்டது.