சசிக்குமாரின் புதிய படத்தின் முக்கிய அட்டேட் !
சசிக்குமார் நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள எம்ஜிஆர் மகன். இப்படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்பதையும் படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர். சசிகுமார், மிருணாளினி, சத்யராஜ் சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அந்தோணிதாசன் இசையமைத்துள்ளார். ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படம் சசிகுமார் மற்றும் பொன்ராம் ஆகியோர் காம்பினேசன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்தோணிதாசன் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வரும் மார்ச் 27 ஆம் தேதி வெளியாகவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.
இப்படத்தின் பாடல்களை சோனி மியூசிக் லேபிளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.