திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 1 மே 2024 (08:00 IST)

சின்னத்திரையின் கில்லி ‘மெட்டி ஒலி’ சீரியல் ரி ரிலீஸ்… வெளியான தகவல்!

மெட்டி ஒலி தொடர் கடந்த 2002 ஆம் ஆண்டில் இருந்து 2005 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 3 ஆண்டுகள் சன் டீவியில் ஓளிப்பரப்பாகி மக்களின் ஆரவார செல்வாக்கைப் பெற்றது. தமிழ் தொலைக்காட்சி உலகில் முதன் முதலில் 1000 எபிசோட்கள் ஒளிப்பரப்பப்பட்ட தொடரும் இதுவே ஆகும். இந்த நாடகத்தை இயக்கி அதில் முக்கியக் கதாபாத்திரமான கோபி எனும் கேரக்டரில் நடித்தார் இயக்குனர் திருமுருகன்.

இந்த சீரியலில் இமாலய வெற்றி காரணமாக இரண்டு முறை இந்த சீரியல் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டது. கொரோனா காலத்தில் ஒளிபரப்பான இந்த சீரியல் ரசிகர்களை பெரியளவில் கவர்ந்தது. அதையடுத்து இப்போது இந்த சீரியலின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க விரும்புவதாக இயக்குனர் திருமுருகன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இப்போது அவரது யுட்யூப் சேனலில் மெட்டி ஒலி சீரியலை ரி ரிலீஸ் செய்ய உள்ளார். இன்று முதல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு எபிசோடாக இந்த சீரியல் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது. இது மெட்டி ஒலி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.