செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 24 அக்டோபர் 2017 (15:00 IST)

தெலுங்கு 'மெர்சல்' சென்சார் ஆகாதது ஏன்?

இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் வெளியாகி பெரும் வசூலை குவித்து வருகிறது. குறிப்பாக பாஜகவினர்கள் பிரச்சனை செய்த பின்னர் இந்த படத்தின் வசூல் தாறுமாறாக எகிறியுள்ளது.



 
 
இந்த நிலையில் 'மெர்சல்' படத்தின் தெலுங்கு படமான 'அதிரிந்தி' படத்தின் சென்சார் இன்னும் ஆகவில்லை. பொதுவாக டப்பிங் படம் சென்சாருக்கு அனுப்பப்பட்டால் ஓரிரண்டு நாட்களில் சென்சார் ஆகிவிடுவது வழக்கம். ஆனால் 'மெர்சல்' சென்சாருக்கு விண்ணப்பித்து ஒருவாரம் ஆகிய நிலையிலும் இன்னும் சென்சார் ஆகாமல் உள்ளது அனைவரையும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மெர்சல்' படத்தை சென்சார் செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மெர்சல் படத்தின் சென்சாரை திரும்ப பெற வேண்டும் என்றும் வழக்குகளும் புகார்களும் பதிவு செய்யப்படுவதால் மெர்சல்' தெலுங்கு படத்தை சென்சார் செய்ய அதிகாரிகள் தயங்குவதாக தெரிகிறது.