திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 12 டிசம்பர் 2017 (17:06 IST)

பள்ளி பாடப்புத்தகத்தில் மெர்சல் விஜய் புகைப்படம்

சிபிஎஸ்இ மூன்றாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் மெர்சல் படத்தில் விஜய் வேஷ்டி சட்டை அணிந்திருக்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

 
மெர்சல் படத்தில் விஜய் தமிழனின் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டையில் வெளிநாடு செல்லும் காட்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதோடு ஆளப்போறான் தமிழன் என்ற பாடலும் நல்ல வரவேற்பை பெற்றது. இதன்மூலம் ரசிகர்கள் தளபதி விஜய் அடுத்து தமிழகத்தை ஆளப்போகிறார் என கூறி கொண்டாடி வருகின்றனர்.
 
இந்நிலையில் சிபிஎஸ்இ மூன்றாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் தமிழர்களின் கலாச்சாரம் என்ற தலைப்பில் விஜய் வேஷ்டி சட்டை அணிந்திருக்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இந்த புகைப்படத்தை ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
 
பொங்கல் விழாவை பற்றிய குறிப்பில் வேஷ்டி, சட்ட்டை தமிழர்களின் பாரம்பரிய உடை என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், வேலாயுதம் படத்தில் விஜய் வேஷ்டி சட்டையுடன் நடந்து வரும் புகைப்படத்தையும் பயன்படுத்தியுள்ளனர்.