2018ல் அதிர்ஷ்டத்தை நோக்கி செல்லும் ஐஸ்வர்யா ராஜேஷ்
2017ஆம் ஆண்டு வரை அதிகமாக கண்டுகொள்ளப்படாமல் இருந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷூக்கு அடுத்த ஆண்டு அதாவது 2018ஆம் ஆண்டு அதிர்ஷ்ட தேவதை ஐஸ்வர்யாவை கையை பிடித்து செல்லும் ஆண்டாக அமையவுள்ளது
ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கி வரும் 'வடசென்னை' படத்தில் தனுஷுடனும், 'கவுதம் மேனன் இயக்கி வரும் 'துருவ நட்சத்திரம்' படத்தில் விக்ரமுடனும் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது இயக்குனர் விஜய் இயக்கவுள்ள அடுத்த படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த நான்கு படங்களுமே வரும் 2018ல் வெளிவரவுள்ளதால் அடுத்த ஆண்டு ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம்பெற்றுவிடுவார் என்று உறுதியாக நம்பப்படுகிறது.