சாதனை படைத்த விஜய்யின் ‘மெர்சல்’....
‘மெர்சல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ரீ ட்வீட் செய்துள்ளனர்.
முன்பெல்லாம் படங்கள் ரிலீஸாகி 100 நாட்கள், 250 நாட்கள் ஓடியதுதான் சாதனையாக கருதப்பட்டது. ஆனால், சமூக வலைதளங்களின் தாக்கம் அதிகமாகிவிட்ட இன்றைய சூழ்நிலையில், லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ்களின் எண்ணிக்கைதான் சாதனையாக கொண்டாடப்படுகிறது. அப்படி ஒரு சாதனையை விஜய்யின் ‘மெர்சல்’ படம் படைத்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் 21ஆம் தேதி விஜய்யின் ட்விட்டர் பக்கத்தில், ‘மெர்சல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. அது, இதுவரை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரால் ரீட்வீட் செய்யப்பட்டுள்ளது. மேலும், 88 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்திருக்கின்றனர். அத்துடன், இரண்டாவது லுக்கையும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ரீட்வீட் செய்துள்ளனர்.