திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 13 நவம்பர் 2023 (12:29 IST)

மேற்கு தொடர்ச்சி மலை படத்தின் வசனகர்த்தா ராசீ தங்கதுரை மரணம்!

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் வாழ்கின்ற எளிய மக்களின் கதையை மேற்கு தொடர்ச்சி மலை என்ற படத்தின் மூலம் உலகுக்கு எடுத்துக் காட்டினார் இயக்குனர் லெனின் பாரதி. இந்த படத்தை நடிகர் விஜய் சேதுபதி தயாரிக்க, இளையராஜா இசையமைத்திருந்தார்.  படத்துக்கு எழுத்தாளர் ராசீ தங்கதுரை வசனங்களை எழுதி இருந்தார்.

நேற்று ராசீ தங்கதுரை உடல்நலக் குறைவு காரணமாக காலமாகியுள்ளார். இதையடுத்து அவருக்கு எழுத்தாளர்களும், திரைக்கலைஞர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது உடல் தேனி மாவட்டம் அவரது சொந்த ஊரில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. அவரது நல்லடக்கம் இன்று மதியம் நடைபெற உள்ளது.