1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Updated : செவ்வாய், 7 பிப்ரவரி 2023 (08:38 IST)

சந்தானம் படத்தில் கதாநாயகியாக இணைந்த பிரபல நடிகை!

சந்தானம் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்திற்கு ’வடக்குப்பட்டி ராமசாமி’ என்ற கவுண்டமணியின் பிரபலமான ஜோக் டைட்டிலாக வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை டிக்கிலோனா படத்தின் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்க இருக்கும் நிலையில் சீன் ரோல்டன் இசையமைக்க உள்ளார்.  படத்துக்கு ஒளிப்பதிவாளராக விட்னஸ் படத்தின் இயக்குனர் தீபக் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்துவரும் நிலையில் படத்தில் கதாநாயகியாக மேகா ஆகாஷ் இணைந்துள்ளார்.