1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 30 ஜனவரி 2023 (09:22 IST)

கொரோனா குமார் படத்தில் இருந்து வெளியேறிய சிம்பு… இப்போ நடிக்கப் போவது இவர்தானா?

நடிகர் சிம்புவை வைத்து இரண்டு படங்களை தயாரிக்க தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஒப்பந்தம் செய்தார். அதில் முதல் படமான வெந்து தணிந்தது காடு திரைப்படம் அறிவிக்கப்பட்டு இப்போது படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் இரண்டாவது படமாக கொரோனா குமார் என்ற படம் உருவாகிறது. இதை இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா பட இயக்குனர் கோகுல் இயக்க இருந்தார்.

ஆனால் இடையில் சிம்பு அந்த படத்தில் நடிக்க விரும்பவில்லை என்று விலகியதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது அந்த படத்தில் சிம்புவுக்குப் பதிலாக லவ் டுடே புகழ் ப்ரதீப் ரங்கநாதனை நடிக்க வைக்க இயக்குனர் கோகுல் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.