திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 22 அக்டோபர் 2021 (16:15 IST)

என் இளவரசனுக்கு ஒரு வயது ஆகிவிட்டது - மேக்னாராஜின் நெகிழ்ச்சி பதிவு!

மேக்னா ராஜ் தமிழில் காதல் சொல்ல வந்தேன் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பேமஸ் ஆனவர். கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவை 10 ஆண்டுகளுக்கு மேல் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். துரதிஷ்டவசமாக சிரஞ்சீவி சர்ஜா மாரடைப்பால் காலமானார். அவர் இறந்த போது மேக்னா ராஜ் கர்ப்பிணியாக இருந்தார். 
 
பின்னர் மேக்னாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து ஒரு வருடம் ஆகியதை மேக்னா தனது சமூகவலைத்தளத்தில் பகிர்ந்து, உன் குழந்தை…. நம் உலகம் ... நமது பிரபஞ்சம் ... நம் அனைத்தும்! சிறுது ... எங்கள் இளவரசன் பிறந்து ஒரு வருடம் ஆகிவிட்டது! நீ மிக வேகமாக வளர்கிறாய் !! நாங்கள் எப்போதும் நித்திய காலத்திற்கு ஒருவருக்கொருவர் கைகளில் கட்டிப்பிடித்திருக்க விரும்புகிறேன்! இனிய பிறந்தநாள் ராயன்! அப்பாவும் அம்மாவும் உன்னை நேசிக்கிறோம்! என நெகிழ்ச்சியாக கூறி பதிவிட்டுள்ளார்.