ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : வியாழன், 8 ஜூன் 2023 (16:34 IST)

நடிகை மேகா ஆகாஷுக்கு விரைவில் திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?

கோலிவுட் சினிமாவின் இளம் கதாநாயகிகளில் ஒருவரான நடிகை மேகா ஆகாஷ் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு தனுஷுடன் என்னை நோக்கி பாயும் தோட்ட படத்தில் நடித்து மறுவார்த்தை பேசாதே பாடலின் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் தன் வசப்படுத்தினார். 
 
தொடர்ந்து தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து வருகிறார். பேட்ட பேட்ட படத்தின் ரஜினியின் மகளாக நடித்து அனைவரையும் கவர்ந்தார். இந்நிலையில் தற்போது பிரபல அரசியவாதியின் மகன் உடன் மேகா ஆகாஷுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.