ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By papiksha joseph
Last Updated : செவ்வாய், 6 ஜூன் 2023 (20:37 IST)

திருமணம் செய்யாமலே இரண்டாம் முறை காதலியை கர்ப்பமாக்கிய பிரபல ஹீரோ!

பிரபல மாடல் அழகருக்கு நடிகருமான அர்ஜுன் ராம்பால் பல்வேறு இந்தி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கடந்த 2001ம் ஆண்டு வெளியான பியார் இஷ்க் அவுர் மொஹபத் என்ற படத்தில் நடித்து அறிமுகம் ஆனார். அதன் பின்னர் இந்தியில் பல படங்களில் நடித்து பிரபலமான ஹீரோவாக புகழ் பெற்றார். 
 
இதுவரை 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் . ராக் ஆன் படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய திரைப்பட விருது மற்றும் சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார். 
 
தற்போது 50 வயதாகும் இவர் மெஹர் ஜெசியா என்ற பெண்ணை 1998ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டு 2019ம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டார். அதே ஆண்டில் கேப்ரியல்லா டிமெட்ரியாட்ஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்யாமலே ஒன்றாக வாழ்ந்து ஒரு ஆண் குழந்தையை பெற்றனர். தற்போது இரண்டாவது முறையாக கேப்ரியல்லா கர்ப்பமாக இருக்கிறார். இதனை பலரும் விமர்சித்துள்ளனர்.