திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 9 ஜனவரி 2018 (21:27 IST)

தனுஷ் பற்றிய குறையை போட்டுடைத்த நடிகை!!

கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை மேகா ஆகாஷ் நடித்துள்ளார். 
 
இவர் நடிப்பில் ஒரு பக்க கதை என்ர படமும் ரிலீஸுக்காக காத்திருக்கிறது. ஆனாலும் இவருக்கு ரசிகர்கள் அதிகம் என்பதால் அவ்வப்போது சில பேட்டிகளில் பங்கேற்கிறார். சமீபத்தில் அவர் பங்கேற்ற பேட்டி ஒன்றில், தனுஷ் குறித்து கேள்வி எழுப்பட்டது. 
 
மேகா இதற்கு பின்வருமாரு பதிலளித்தார். தனுஷிடம் பிடிக்காதது என்று ஏதுமில்லை, மிகச்சிறந்த நடிகர் அவர். ஆனால், படப்பிடிப்பில் என்னை விட மிகவும் அமைதியாக இருப்பார், பேசவே மாட்டார், அது மட்டும் தான் குறை என்று கூறியுள்ளார்.