வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 17 மே 2021 (11:23 IST)

தன் வாழ்க்கை வரலாறு படத்தின் புதிய பாடலை வெளியிட்ட மீரா மிதுன்!

கடந்த 2016- ம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு சவுத் பட்டம் வென்ற மீரா மிதுனுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கதவு தட்டியது. பின்னர் சூர்யா நடித்த 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்திருந்தார். அதையடுத்து அழகி போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களை மோசடி செய்து மோசடி புகாரில் சிக்கினார்.
 
பின்னர் பிக்பாஸில் பங்கேற்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அங்கு சக போட்டியாளர்களுடன் சண்டை வாக்குவாதம் என மக்களிடையே அவப்பெயரை சம்பாதித்த மீரா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து சூர்யா , விஜய் உள்ளிட்ட நடிகர்களை தகாத வார்தைகளால் திட்டி வீடியோ வெளியிட்டு விமர்சனத்திற்கு ஆளானார். 
 
இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் தன்னுடைய பயோபிக் படத்தில் இடம்பெறுள்ள புதிய பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் ஹீரோ , ஹீரோயின் ரேஞ்சுக்கு அவங்க பண்ணியிருக்கும் அலப்பறையை கொஞ்சம் பாருங்களேன். ப்பாஹ் சகிக்க முடியல என நெட்டிசன்ஸ் எல்லோரும் கழுவி ஊற்றி வருகின்றனர்.