திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 15 மே 2021 (16:03 IST)

மைனா படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவங்களா...? தலைக்கனத்தால் வாய்ப்பை தவறவிட்ட நடிகை!

பிரபு சாலமன் கதை எழுதி இயக்கி 2010 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் மைனா.  இதில் வித்தார்தும் அமலாபாலும் ஜோடியாக நடித்து ஹிட் அடித்தனர். ஆனால், இந்த  படத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகை அனன்யா தானாம். 
 

மைனா படத்தின் ரோலுக்கு அனன்யா பொருத்தமாக இருப்பார் என எண்ணியிருந்த பிரபு சாலமோன் நேரில் சென்று கதை கூறும்போதெல்லாம் அனன்யா பொறுப்பாக பதில் கூறவில்லையாம். காரணம், அந்த நேரத்தில் அவரது நடிப்பில் வெளியான நாடோடிகள் படம் ஹிட் அடித்ததால் பிரபுசாலமனின் வார்த்தைக்கு மரியாதை கொடுக்காமல் கேர்லஸ் ஆக இருந்துள்ளார். அதன் பின்னர் அமலா பாலின் மேக்கப் இல்லா முகத்தை பார்த்ததும் உடனே ஓகே பண்ணிட்டாராம்.