1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 26 ஏப்ரல் 2021 (13:18 IST)

ஆண்களுடன் பப்பில் கூத்தடிக்கும் மீரா மிதுன் - கேடு கெட்ட காதலன்!

மீரா மிதுன் வெளியிட்ட ஒர்ஸ்ட் வீடியோவை கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!
 
கடந்த 2016- ம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு சவுத் பட்டம் வென்ற மீரா மிதுனுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கதவு தட்டியது. பின்னர் சூர்யா நடித்த 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்திருந்தார். அதையடுத்து அழகி போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களை மோசடி செய்து மோசடி புகாரில் சிக்கினார்.
 
பின்னர் பிக்பாஸில் பங்கேற்க அவருக்கு வாய்ப்பு கிடைத்து. ஆனால், அங்கு சக போட்டியாளர்களுடன் சண்டை , வாக்குவாதம் என மக்களிடையே அவப்பெயரை சம்பாதித்து மீரா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். 
 
இதையடுத்து கடந்த சில நாட்களாக சூர்யா , விஜய் , த்ரிஷா , நயன்தாரா உள்ளிட்ட பெரிய நட்சத்திரங்களை பற்றி அவதூறாக பேசி வீண் வம்பு இழுத்து ரசிகர்களால் அவமானப்பட்டார். தொடர்ந்து சர்ச்சையான காரியங்களை செய்து வரும் அவர் தற்போது தனது காதலன் மற்றும் சில ஆண்களுடன் சேர்ந்து பப்பில் ஆட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவரது பாய் பிரண்ட் மற்றும் ஆண் ஒருத்தர் சேர்ந்து மீராவை அலேக்கா தூக்கி கூத்தடித்துள்ளனர். இதோ அந்த வீடியோ...