அந்த நூலுக்கு பிரச்சனை என்றதும் இந்த நூல் குரல் கொடுத்துச்சு - கமல் ஜாதி குறித்து மீரா சர்ச்சை பதிவு!

Papiksha Joseph| Last Updated: புதன், 29 ஜூலை 2020 (19:49 IST)

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் நடிகையுமான மீராமிதுன் அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் தனது டுவிட்டரில் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கமாக இருந்து வருகிறது.

அந்த வகையில் நடிகை த்ரிஷா குறித்து, அவர் உயர் ஜாதிப் பெண் என்றும் அதனால்தான் அவர் திரையுலகில் இத்தனை ஆண்டுகள் நீடிக்க முடிகிறது என்றும் இவ்வாறு உயர் ஜாதியினர் மட்டுமே திரையுலகில் வாய்ப்பு பெற்று வருவதை தடுக்க வேண்டும் என்றும் கூறி சர்ச்சையை கிளப்பினார்.

இந்நிலையில் தற்ப்போது கமல் ஹாசனையும் வம்பு இழுத்து அவரது சாதி குறித்து சர்ச்சையாக பதிவிட்டுள்ளார். அதில் "ஒரு நூலுக்கு பிரச்சினை என்றதும் இன்னொரு நூல் குரல் குடுத்தது. ஆனால், அதே நூல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் என் பெண்மைக்கு பிரச்சினை என்ற போது போது குரல் கொடுக்காதது ஏன் ? நான் நூல் ஜாதி இல்லாததால் தானே என்று பதிவிட்டுள்ளார். அதாவது, நடிகை திரிஷா ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பீட்டா அமைப்பிற்கு ஆதரவு தெரிவித்ததால் கடும் விமர்சனத்திற்குள்ளானார். அப்போது கமல் அவருக்கு ஆதரவு தெரிவித்து ட்விட் போட்டதை ஸ்க்ரீன் ஷாட்டுடன் இப்படி வம்புக்கு இழுத்து சர்ச்சை பதிவிட்டுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :