வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 25 நவம்பர் 2020 (17:13 IST)

விஜய்யின் தந்தையை பாராட்டிய மீரா மிதுன் – கடுப்பான விஜய் ரசிகர்கள்!

நடிகை மீரா மிதுன் விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகரை பாராட்டி பேசியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

சில நாட்கள் முன்னதாக நடிகர் விஜய் பெயரில் அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் புதிய அரசியல் கட்சி தொடங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தனக்கும் அந்த கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லையென்று விஜய் அறிவித்தார். தொடர்ந்து விஜய்யின் தாயார் ஷோபா கட்சி பதவியிலிருந்து விலகிய நிலையில், கட்சி தலைவராக அறிவிக்கப்பட்ட ஏ.கே.ராஜாவும் பதவி விலகினார்.
இந்நிலையில் தற்போது தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ள எஸ்.ஏ.சந்திரசேகர் நடிகர் விஜய் பெயரில் தொடங்கப்பட்ட கட்சி மீது விஜய்க்கு அதிருப்தி உள்ளதால் கட்சியின் பெயரை பதிவு செய்ய வேண்டாம் என கடிதம் எழுதியுள்ளதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் இப்போது விஜய்யை தொடர்ந்து தாக்கிப் பேசி வரும் மீரா மிதுன் எஸ் ஏ சந்திரசேகரைப் பாராட்டியுள்ளார். அதில் ‘நன்றி சந்திரசேகர் சார். விஜய்யை சுற்றியுள்ள மாபியா பற்றி பேசியதற்கு. என்னுடைய அறிவுரை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.