1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 6 ஏப்ரல் 2020 (20:01 IST)

துப்புரவு பணியாளர்களுக்கு மளிகை காய்கறி பொருட்கள் வாங்கி கொடுத்த விஜய் ரசிகர்கள்

காய்கறி பொருட்கள் வாங்கி கொடுத்த விஜய் ரசிகர்கள்
கோவையை சேர்ந்த 150 துப்புரவு பணியாளர்களின் குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை சாமான்கள் மற்றும் காய்கறி பொருட்களை அப்பகுதி விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் வாங்கிக் கொடுத்தது பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது
 
கோவை சிஎம்டிஏ என்ற பகுதியில் துப்புரவு பணியாளர்கள் அதிகம் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் நாள் முழுவதும் துப்புரவு பணியை செய்து முடித்து விட்டு வீடு திரும்புவதால், தங்களுடைய குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு கூட இவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை
 
இதனை அறிந்து அந்த பகுதியில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தினர் 150 தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகைப் பொருட்களும் மற்றும் ஒரு சில காய்கறிகளும் வாங்கிக் கொடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி கிருமிநாசினி மிஷின்கள் வாங்கிக் கொடுத்தும் உதவி செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் இந்தநேரத்தில் துப்புரவு பணியாளர்களின் சேவை மகத்தானது என்பதால் இந்த உதவியை தாங்கள் செய்துள்ளதாக விஜய் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்