ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 30 மே 2024 (20:50 IST)

பிரேம்ஜிக்கு திருமணம்.? சமூக வலைத்தளங்களில் பத்திரிக்கை வைரல்.!

நடிகர் பிரேம்ஜிக்கு ஜூன் 9ஆம் தேதி திருமணம் நடக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 
 
நடிகர் பிரேம்ஜி ஆரம்பகட்டத்தில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். பின்பு முதன்மை கதாபாத்திரத்திலும் நடித்தார். கடைசியாக சத்திய சோதனை படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
 
தற்போது விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார்.  45 வயதை எட்டியுள்ள பிரேம்ஜி இன்னமும் திருமணம் செய்துக் கொள்ளாமல் உள்ளார்.
 
இந்த ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டன்று, இந்த வருடம் தான் திருமணம் செய்துகொள்வதாக அவரது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார். ஆனால் மணப்பெண் குறித்து அவர் குறிப்பிடவில்லை. இதையடுத்து 22 வயதாகும் பாடகி வினைதாவைத்தான் பிரேம்ஜி திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியானது. 
 
Premji
இந்த நிலையில் பிரேம்ஜிக்கு ஜூன் 9ஆம் தேதி திருமணம் நடக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான பத்திரிக்கை ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் மணப்பெண் பெயர் இந்து எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


இருவருக்கும் இருவீட்டாரின் சம்மதத்துடன் ஜூன் 9ஆம் தேதி திருத்தனி முருகன் கோயிலில் திருமணம் நடக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.