செவ்வாய், 2 ஜூலை 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 21 ஆகஸ்ட் 2023 (19:11 IST)

''விஜய்68 '' படத்தில் விஜய்க்கு ஜோடியாகும் பிரபல நடிகை?

விஜய் நடிப்பில் உருவாகவுள்ள ‘விஜய்68’ படத்தில் பிரபல நடிகை  நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய், இவர், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லியோ படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் செப்டம்பர் 29 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இதைடுத்து, விஜய் நடிக்க இருக்கும் தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாக இருக்கும்  இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
 

இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படும் நிலையில்,  பிரபல  நடிகை பிரியங்கா மோகன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது. மேலும், கேப்டன் மில்லர் படத்தின்  ஒளிப்பதிவாளர் சித்தார்தா நுனி இப்படத்திற்கு  ஒளிப்பதிவு செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது.