1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 16 பிப்ரவரி 2022 (12:28 IST)

பிரம்மாண்டமாக அமைக்கப்படும் மார்க் ஆண்டனி பட செட்… இயக்குனர் பகிர்ந்த புகைப்படம்!

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பில் மார்க் ஆண்டனி திரைப்படம் உருவாக உள்ளது.

விஷால் சர்ச்சை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தை விஷாலின் எனிமி படத்தை தயாரித்த மினி ஸ்டுடியோஸ் வினோத்குமாரே தயாரிக்க உள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க எஸ் ஜே சூர்யாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் குமார் இசையமைக்க உள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில் படத்துக்கான செட் அமைக்கும் பணிகள் இப்போது நடந்து வருகின்றன. அதனை மேற்பார்வையிடும் இயக்குனர் ஆதிக், செட்டின் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.