திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 15 நவம்பர் 2022 (22:15 IST)

உதயநிதி நடிகர்களை அன்புடன் நடத்துவார்- பிரபல நடிகை

kalaga thalaivan
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின்  பல முன்னணணி நடிகர்களின் படங்களை விநியோகிப்பதுடன் படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

 நடித்துள்ள கலகத் தலைவன். இப்படத்தில் அவருடன் இணைந்து  நிதி அகர்வால், பிக்பாஸ் ஆரவ், கலையரசன்  உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.

இப்படம் வரும்  நவம்பர் 18 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், பிரபல ஊடகத்திற்கு பேட்டியளித்த நடிகை நிதி அகர்வால், இப்படம் குறித்து தன் அனுபவங்களைக் கூறினார்.



அவர் கூறியதாவது:

‘’கலகத்தலைவன் படத்தில் நான் மேக்கப் இல்லாமல் நடித்திருக்கிறேன். தமிழ்ப் படங்களில் நடிப்பதால் தமிழ் கற்றுக்கொண்தாகவும், இப்படத்தின் ஷூட்டிங்கின் போது, உதய நிதி சக நடிகர்களை அன்புடன் அரவணைத்து  நடத்துவார்’’ என்று தெரிவித்துள்ளார்.

Edited by Sinoj