வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 25 செப்டம்பர் 2024 (09:14 IST)

மாரி செல்வராஜ் இயக்கும் ‘பைசன்’ படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் நிறைவு!

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூன் மாதம் தொடங்கியது.  அதே நாளில் இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. படத்துக்கு பைசன் காளமாடன் எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் துருவ் விக்ரம்மோடு அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடிக்க, முதல் முறையாக மாரி செல்வராஜோடு கூடட்ணி அமைத்துள்ளார் இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா. படத்தை இயக்குனர் பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் அப்லாஸ் எண்டர்டெயின்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

வாழை படத்தின் ரிலீஸ் பணிகளில் பிஸியாக இருந்த இயக்குனர் மாரி செல்வராஜ் தற்போது பைசன் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார். தூத்துக்குடியில் எடுக்க வேண்டிய காட்சிகள் அனைத்தையும் எடுத்து முடித்துவிட்டதாக சொல்லப்படுகிறது. அடுத்த கட்ட ஷூட்டிங் சென்னையில் விரைவில் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.