புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 20 மார்ச் 2021 (16:50 IST)

தெருநாயிடம் பேசிய மன்சூர் அலிகான்.,. வித்தியாசமான பிரச்சாரம்!

கோவை தொண்டாமுத்தூரில் பிரச்சாரம் மேற்கொண்ட மன்சூர் அலிகான் தெருநாயின் அருகே அமர்ந்து பேச ஆரம்பித்தார்.

தமிழ் சினிமா நடிகரான மன்சூர் அலிகான் நாம் தமிழர் கட்சியில் இருந்து வந்த நிலையில் முந்தைய தேர்தல்களிலும் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டவர். இந்நிலையில் தற்போது நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியில் சீட் வழங்கப்படாத நிலையில், கட்சியிலிருந்து விலகி தமிழ் தேசிய புலிகள் கட்சி என்ற கட்சியை தொடங்கினார்.

இந்நிலையில் தற்போது கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் சுயேச்சையாக போட்டியிட மன்சூர் அலிகான் மனு தாக்கல் செய்துள்ளார். அதையடுத்து  இன்று அந்த பகுதியில் அவர் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அப்போது அங்கே உள்ள மக்களிடம் பேசி பிரச்சனைகளைக் குறித்துக் கொண்டார். அப்போது அங்கே சுற்றிக்கொண்டிருந்த தெருநாய் ஒன்றின் அருகே அமர்ந்து பேச ஆரம்பித்தார். கடந்தமுறை திண்டுகல்லில் அவர் போட்டியிட்ட போதும் அவர் இதுபோன்ற கவன ஈர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.