திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinothkumar
Last Modified: புதன், 5 ஆகஸ்ட் 2020 (10:53 IST)

பாரதிராஜாவின் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் மனோஜ் –ஹீரோ யார்?

இயக்குனர் இமயம் இயக்கி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் சிகப்பு ரோஜாக்கள் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளார் அவர் மகன் மனோஜ்.

தன்னுடைய படங்களில் பல புதுமுகங்களை நடிக்க வைத்து ஸ்டார்களாக ஜொலிக்க வைத்தவர் பாரதிராஜா. ஆனால் அவரது மகனை ஒரு வெற்றிகரமான கதாநாயகனாக அவரால் உருவாக்க முடியவில்லை. இந்நிலையில் தனக்கு நடிப்பு சரிவராது என முடிவு செய்த மனோஜ் பாரதிராஜா இப்போது ஒரு படத்தை இயக்க முடிவு செய்துள்ளார்.

தனது தந்தை இயக்கத்தில் 80 களில் வெளியான சிகப்பு ரோஜாக்கள் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இருக்கிறார். இதற்கான திரைக்கதை பணிகள் முடிந்து இப்போது  நடிகர்கள் தேர்வில் மும்முரமாக இருக்கிறார். கமல் மற்றும் ஸ்ரீதேவி கதாபாத்திரங்களில் நடிக்கும் கதாபாத்திரங்கள் இன்னும் தேர்வாகவில்லை என சொல்லப்படுகிறது.