1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Modified: புதன், 25 மார்ச் 2020 (10:08 IST)

குந்தாணி சோறு நீ போடுவியா...? மஞ்சிமா மோகனை சண்டைக்கு இழுத்த ரசிகர்கள்

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் 536 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. எனவே மக்களின் நலன் கருதி இந்திய அரசு மேலும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதனை கருத்தில் கொண்டு தனிப்பட்ட மக்கள் ஒவ்வொருவரும் மிகுந்த பாதுகாப்பதுடன் இருந்து வருகின்றனர். இதற்கிடையில் திரைத்துறை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உட்பட பலரும் தங்கள் சார்பில் விழிப்புணர்வு அறிவுரைகளை கூறிவருகின்றனர். அந்தவகையில் தற்போது     நடிகை மஞ்சிமா மோகன் பதிவிட்ட கருத்திற்கு ரசிகர்கள் அவரை திட்டி வருகின்றனர்.


அப்படி அவர் என்ன கூறினார் என்று பார்த்தால், "மக்கள் ஏன் வீட்டில் தங்குவது மிகவும் கடினம் என்று நினைக்கிறார்கள்? எனக்கு இன்னும் புரியவில்லை !! வீட்டிலேயே இருங்கள்! அது தான் உங்களுடைய நலனுக்கு நல்லது".  என்று பதிவிவிட்டுள்ளார். இதனை கண்ட இணையவாசி ஒருவர் " அடியே குந்தாணி சோறு நீயா போடுவ?" என கேட்டு கமெண்ட்ஸ் செய்துள்ளார். இதற்கு பதிலளித்த மஞ்சிமா,  எங்களுக்கு மட்டும் பணம் என்ன வானத்தில் இருந்து கொட்டுகிறதா? என கேட்டார்.


உடனே மற்றொரு நபர், வீட்டிலேயே இருங்கள் என்று நீங்கள் ஈஸியா சொல்லிடுறிங்க... அன்றாடம் கூலி வேலை செய்பவர்கள் கடன், இஎம்ஐ போன்றவற்றை எப்படி கட்டமுடியும்?  செல்பவர்களை குறை சொல்லாதீர்கள். அவர்களுக்கு பல பிரச்சனைகள் இருக்கிறது என்றார். அதற்கு மஞ்சிமா, கடன், இஎம்ஐ உள்ளிட்டவை எங்களுக்கு இல்லையா? அதை நாங்கள் வெளிக்காட்டிக்கொள்வதில்லை. யாரும் உயிர் விஷயத்தில் தேவையில்லாமல் ரிஸ்க் எடுக்காதீர்கள் என கூறி முடித்திவிட்டார் மஞ்சிமா.