1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 22 மார்ச் 2020 (10:30 IST)

மணிரத்னம் மகனுக்கு கொரோனாவா? தனிமை அறையில் இருக்கும் வீடியோ

மணிரத்னம் மகனுக்கு கொரோனாவா?
பிரபல இயக்குனர் மணிரத்தினம் மகன் நந்தன் கடந்த ஐந்து நாட்களாக தனிமையாக இருப்பதால் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்ற வதந்தி பரவி வருகிறது
 
இது குறித்து வீடியோ ஒன்றை நடிகை சுஹாசினி வெளியிட்டுள்ளார். தனது மகன் நந்தன் கடந்த 18ஆம் தேதி லண்டனில் இருந்து திரும்பி வந்ததாகவும் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்றாலும் அவருடைய பாதுகாப்பு மற்றும் மற்றவர்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடந்த 5 நாட்களாக தனிமையில் இருப்பதாகவும் கூறியுள்ளார் 
 
தனிமைப்படுத்தப்பட்ட ஒரு கண்ணாடி அறையில் அவர் இருப்பதாக கூறி சுஹாசினி வெளியிட்டுள்ள வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
 
அந்த வீடியோவில் மணிரத்னம் மகன் நந்தன் கூறியதாவது: நான் கடந்த 5 நாட்களாக தனிமையில் இருக்கிறேன். யாருடனும் இன்னும் நான் நெருங்க வில்லை. எனக்கு சாப்பாடு கூட தனியாகத்தான் கொண்டுவந்து கொடுக்கின்றனர். எனக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்றாலும் என்னுடைய பாதுகாப்பு கருதியும் எனது குடும்பத்தினரின் பாதுகாப்பை கருதியும் நான் தனிமையில் இருக்க முடிவு செய்தேன் இது வரை 5 நாட்கள் இருந்திருக்கிறேன் இன்னும் ஒன்பது நாட்களில் தனிமையில் இருக்க முடிவு செய்துள்ளேன். இதேபோல் வெளிநாட்டிலிருந்து வந்த அனைவரும் தங்களை தாங்களே 14 நாட்கள் தனிமைப் படுத்திக் கொண்டால் அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் பாதுகாப்பானதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்
 
மணிரத்னம் மகன் நந்தனின் இந்த முயற்சியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.