குட்டி ஸ்டோரி பாடலை பாடி அசத்தும் வெளிநாட்டு விஜய் ரசிகை - வைரல் வீடியோ!

Papiksha Joseph| Last Updated: சனி, 23 மே 2020 (08:14 IST)

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் "மாஸ்டர்’ படத்தில் நடித்து வருகிறார். கல்லூரி பேராசிரியராக விஜய் நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார். மாணவராக சாந்தனு பாக்யராஜும் , வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர்.

மேலும் ஆன்ட்ரியா, 96 புகழ் கௌரி கிஷன் உள்ளிட்ட சிலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இப்படத்தின் முதல் மூன்று போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதையடுத்து மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான குட்டி ஸ்டோரி சிங்கிள் பாடல் தற்போது வரை 56 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது வருகிறது.

இந்நிலையில் தற்போது இந்த பாடலை வெளிநாட்டு ரசிகை ஒருவர் செம கியூட்டாக பாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோ விஜய் ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்து ரெண்ட் செய்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :