திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 24 ஜூன் 2023 (21:18 IST)

இயக்குனர் மணிரத்னம் பிறந்தநாள் -நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து

kamalhasan- manirathnam
இயக்குனர் மணிரத்னத்திற்கு நடிகர் கமல்ஹாசன் பிறந்த நாள் வாழ்த்துகள் கூறியுள்ளார்

இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர் மணிரத்னம். இவர், பல்லவி அனுபல்லவி என்ற படத்தின் மூலம்  சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அதன்பின்னர், இதய கோவில், பகல் நிலவு, மெளனராகம், நாயகன் தளபதி, ரோஜா, காற்றுவெளியிடை, செக்கச்சிவந்த வானம் போன்ற படங்களை இயக்கியிருந்தார்.

சமீபத்தில், இவர் இயக்கத்தில், பொன்னியின் செல்வன்-1, 2 ஆகிய படங்கள்  வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றன.

இந்திய சினிமாவில் உள்ள நட்சத்திரங்கள்  மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று விரும்புவர்.

அந்த வகையில், ஒவ்வொரு படத்திலும் தன் திறமையைக் காட்டி, இந்திய சினிமாவை சர்வதேச தரத்திற்கு உருவாக்குவதில் மணிரத்னம் புகழ்பெற்றவர்.

இன்று அவரது 66வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

இந்த  நிலையில், இயக்குனர் மணிரத்னத்திற்கு நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ள வாழ்த்துச் செய்தியில், '' தனது கலையின் மூலம் மில்லியன் கணக்கானோரின் இதயங்களைத் தொட்ட இந்திய சினிமாவின் ஒரு நாயகன். உரையாடல்களை அழகாகக் காட்சி அனுபவமாக மாற்றியவர். தொடர்ந்து கற்றுக் கொண்டு சவாலின் அளவைக் கவனிக்காமல், சினிமாவில் எல்லைகள் தொட்டுவிட்டீர்கள், அடுத்ததலைமுறை தயாரிப்பாளர்களை ஊக்குவிக்கும் ஒரு மாஸ்டர் நீங்கள்… நாயகன் முதல் KH234 ( கமல்- மணிரத்னம் இணையும் அடுத்த படம்) வரையிலான பயணம் எனக்கு தனிப்பட்ட வகையில், மதிப்பாகவும், வளமாகவும் இருந்தது….இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நண்பரே’’ என்று தெரிவித்துள்ளார்.